A última palavra vem do Senhor
A última palavra pertence ao Senhor. Os planos do homem estão sujeitos à soberania de Deus. Ele rege toda a história e nenhum de seus propósitos pode ser frustrado.
தேவ ஞானமும் நீதியும்
மனதின் யோசனைகள் மனிதனுடையது;
நாவின் பதில் யெகோவாவால் வரும்.
யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்;
தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;
மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;
அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா?
அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?
அதற்குக் யெகோவா மோசேயை நோக்கி: "யெகோவாவுடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்" என்றார்.
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
"தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்;
நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும்,
யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
இதோ, அது வந்து, அது நடந்தது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே. ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.