Admiração
O temor do Senhor é o princípio da sabedoria. A admiração reverente por Deus é a postura que produz conhecimento, obediência e bênção na vida do crente.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்,
பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல்.
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது,
கனத்திற்கு முன்பு தாழ்மை.
அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட,
சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்;
பெருமையையும் அகந்தையையும்
தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன்.
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை,
செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது.
உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே;
யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.
அது உன் உடலுக்கு சுகத்தையும்,
உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும்.
கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்;
ஆனால் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்ணே புகழப்படத்தக்கவள்.
எல்லாவற்றையும் கேட்டு,
நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்:
இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்;
மனிதனின் பிரதான கடமை இதுவே.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.
நித்தியமான துதி அவருக்கே உரியது.
அல்லேலூயா.
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,
அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்
அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்
அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்;
ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
ஆனால் என் பெயரில் பயபக்தியுடன் வாழ்கிற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதிப்பார். அவரின் ஒளிக்கதிரில் சுகம் கொடுக்கும் தன்மை இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு வெளியே போகும் கன்றுகளைப்போல, துள்ளிக் குதிப்பீர்கள்.
யெகோவாவுக்குப் பயந்து நடத்தல்
இப்பொழுதும் இஸ்ரயேலே, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடமிருந்து எதைக் கேட்கிறார்? நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கவேண்டும். அவரிடம் அன்பு செலுத்தி, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும். உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் யெகோவாவினுடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையே கேட்கிறார்.
ஆகையால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே பின்பற்றவேண்டும், அவரிடத்திலேயே பயபக்தியாயிருக்கவேண்டும். அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவருக்குப் பணிசெய்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும்.
மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார்.
ஆகையால் என் அன்பு நண்பர்களே, இவ்விதமான வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகிற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக் கொள்வோம்; இறைவன் மேலுள்ள பயபக்தியின் நிமித்தம், நமது பரிசுத்தத்தை முழுமையாக்கிக் கொள்வோம்.
நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம்பண்ண வேண்டுமானால் கனம்பண்ணுங்கள்.
"எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய
பயத்தைக் கைவிட்ட போதிலும்,
அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.