Agradecimento pela família
Agradecer pela família é reconhecer a bênção mais preciosa que Deus nos concede. Os filhos são herança do Senhor — cada membro da família é presente divino a ser celebrado.
பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து;
பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள்
போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய
மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது,
அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்;
யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும்,
அவருடைய வல்லமையையும்,
அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்;
பிள்ளைகளுக்குப் பெருமை அவர்களின் பெற்றோர்களே.
இந்தப் பிள்ளைக்காகவே நான் மன்றாடினேன். யெகோவாவும் நான் அவரிடம் கேட்டதை எனக்குக் கொடுத்தார்.
ஜெபமும் நன்றி செலுத்துதலும்
நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது.
நாடுகளின் குடும்பங்களே,
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல.
அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
அப்பொழுது அவ்வூர்ப் பெண்கள் நகோமியிடம், "யெகோவாவுக்குப் புகழ் உண்டாவதாக, அவர் இன்று உனக்கு ஒரு மீட்டுக்கொள்ளும் உரிமையாளனைத் தராமல் விடவில்லை. அதனால் இந்தப் பிள்ளை இஸ்ரயேல் எங்கும் பெயர் பெற்று விளங்குவானாக. அவன் உன் வாழ்க்கையைப் புதுப்பித்து, உன் முதிர்வயதில் உன்னை ஆதரிப்பான். உன்மேல் அன்பாயிருக்கிறவளும், ஏழு மகன்களைப் பார்க்கிலும் உனக்கு மிக அருமையானவளுமான உனது மருமகள் அவனைப் பெற்றாளே!" என்றார்கள்.
இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல,
வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு
உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.