Agradecimento pela vida
Agradecer pela vida é reconhecer que cada respiração é dom de Deus. Toda criatura que tem fôlego louve ao Senhor — porque Ele nos formou e nos sustenta com amor.
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
அல்லேலூயா.
யெகோவாவைத் துதி.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;
நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;
என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.
நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,
நான் உம்மைத் துதிக்கிறேன்;
உமது செயல்கள் ஆச்சரியமானவை,
நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.
நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,
நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது,
என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.
உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;
எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும்,
அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,
என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்;
நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது!
மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்;
நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்.
ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது;
உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,
ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;
என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.
என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
நீர் என்னை சுகமாக்கினீர்.
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;
குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்;
உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்;
மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார்.
விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.
பிதாவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவீர்கள். அவரே ஒளியின் அரசில் இறைவனுடைய மக்களுக்குரிய உரிமையில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதியுடையவர்களாக்கினார். ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு.
கிறிஸ்து முதன்மையானவர்
கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன. இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது.
நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள்.
யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்;
என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,
கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது.
ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
"யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்
நான் உம்மையே நினைத்தேன்,
என் மன்றாட்டு மேலெழுந்து
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.