Ajuda
Deus é nosso auxílio e socorro em todo tempo. Ele não dorme nem cochila. O Senhor é nosso ajudador — não precisamos temer o que o homem possa nos fazer.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,
அவர்களை விடுவிப்பார்;
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.
என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,
உமது பெயருக்காக எங்களை விடுவித்து,
எங்களுடைய பாவங்களை மன்னியும்.
யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்;
அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்;
என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்;
ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது;
என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,
என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்.
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார்.
அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.