Amigo
O amigo verdadeiro é dádiva rara de Deus. Ele ama em todo tempo, fala a verdade em amor, aconselha com sabedoria e permanece fiel nas adversidades da vida.
Amizade verdadeira
Há amigo mais chegado que um irmão. Em todo tempo ama o amigo. O perfume e o incenso alegram o coração — assim o conselho doce do amigo.
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்;
ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.
நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்;
இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல,
ஒருவருடைய நண்பரின் அருமை
இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது.
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
மறைவான அன்பைவிட,
வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது.
நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள்,
ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை.
நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே,
உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே;
தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல்.
ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்;
ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள்.
பழமொழி 3
கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே,
கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே.
ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,
உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.
அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்;
ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்;
ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள்.
Jesus, o amigo
Já não vos chamo servos, mas amigos. O maior amor é dar a vida pelo amigo. Jesus é o amigo que nunca falha.
ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். நான் இனிமேலும் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் ஒரு வேலைக்காரன் தன் எஜமானுடைய வேலைகளை அறியமாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்.
நான் உங்களில் அன்புகூர்ந்தது போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டுமென்பதே என் கட்டளை. ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை.
அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது.
இவ்விதமாகவே, அன்பு என்ன என்பதை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்: இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததின் மூலமாக நாமும் நமது சகோதரருக்காக அல்லது சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். யாராவது உலகப்பொருட்கள் உடையவனாயிருக்கையில், தனது சகோதரன் அல்லது சகோதரி கஷ்டத்தில் இருப்பதைக் கண்டும், அனுதாபம் கொள்ளாதிருந்தால், அவனில் இறைவனுடைய அன்பு இருப்பது எப்படி? அன்பான பிள்ளைகளே, நாம் வார்த்தையிலும் பேச்சிலும் மட்டும் அன்பாய் இருக்கிறவர்களாயிராமல், செயல்களிலும் சத்தியத்திலும் அன்பை காட்டுவோமாக.
இவ்விதமாய், "ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது" என்று வேதவசனம் சொல்கிறபடி நிறைவேறிற்று. ஆபிரகாம் இறைவனின் நண்பன் எனவும் அழைக்கப்பட்டான்.
ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள்,
Companheiros de fé
Dois são melhores do que um. Os companheiros de fé se fortalecem mutuamente e caminham juntos com o Senhor.
தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது.
ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள்.
ஒருவன் விழுந்தால்,
அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும்.
ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ,
பரிதாபத்திற்குரியவன்.
இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும்,
எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற
விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது;
ஆரோனின் தாடியில் வடிந்து,
அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
எர்மோன் மலையின் பனி
சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது;
ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்;
வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.
உமக்குப் பயந்து நடக்கிற,
உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.
யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான்.
ஏமாந்து போகவேண்டாம்: "கெட்டவர்களின் நட்பு நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும்."