Amor próprio
O amor próprio saudável reconhece o valor que Deus nos deu. Fomos criados à imagem de Deus, maravilhosamente formados. Aceitar-se é honrar o Criador.
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
உமது செயல்கள் அதிசயமானவைகள்;
அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;
அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
அவைகளை நான் எண்ணப்போனால்,
மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,
மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;
மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து
தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய
புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும்,
ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும்,
அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.