Aniversário de idoso
O aniversário de um idoso é celebração de uma vida longa e cheia de experiências com Deus. A Bíblia honra os cabelos brancos como coroa de glória e prova da fidelidade divina.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்;
அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும்.
யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;
என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.
என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;
நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
தானியமும் புதுத் திராட்சை இரசமும்
நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட
அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.
நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,
அதையே நான் தேடுகிறேன்:
நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,
அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்
நான் என் வாழ்நாள் முழுவதும்
யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும்,
அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
நரைமுடி மேன்மையின் மகுடம்,
அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.
வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்;
முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
"யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன்.
" ‘ "யெகோவா உங்களை ஆசீர்வதித்து,
உங்களைக் காப்பாராக;
யெகோவா உங்கள்மேல் தமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி,
உங்களுடன் கிருபையாய் இருப்பாராக.
யெகோவா தமது முகத்தை உங்கள் பக்கமாய் திருப்பி,
உங்களுக்குச் சமாதானம் கொடுப்பாராக." ’
பிரியமானவனே, உன் ஆத்துமா இருப்பதுபோல், நீ உன் உடல் நலத்திலும் மற்றெல்லாவற்றிலும் நன்றாயிருக்கும்படி, நான் உனக்காக மன்றாடுகிறேன்.