Bom dia
Cada manhã é presente de Deus. As misericórdias do Senhor se renovam cada dia. A Bíblia convida a começar o dia com louvor, oração e gratidão ao Criador.
Manhã com Deus
De manhã te apresentarei a minha oração. Pela manhã ouvirás a minha voz — eu te busco ao despertar.
யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;
காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,
உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;
உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;
நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Misericórdias renovadas
As misericórdias do Senhor se renovam cada manhã. Este é o dia que o Senhor fez — alegremo-nos e nos regozijemos nele.
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அவைகள் காலைதோறும் புதியவைகள்;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்;
ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அவைகள் காலைதோறும் புதியவைகள்;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
இது யெகோவா உண்டாக்கின நாள்;
இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
அவரைப் புகழ்ந்துபாடி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்;
காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி,
காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
Louvor matinal
Saciai-nos de manhã com a tua benignidade. Todo dia te louvarei e celebrarei o teu nome para sempre.
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,
உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,
எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,
உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,
தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,
நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்!
நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்;
இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது;
என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.
யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
Graça para o novo dia
O Senhor te abençoe e te guarde. Cada novo dia é oportunidade de viver sob a graça do Deus que nos ama.
"யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.
"யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து,
உன்மேல் கிருபையாக இருபாராக.
"யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார்,
என்பதே.
காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்;
கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.