Compreensão
A verdadeira compreensão vem de Deus. Os caminhos do Senhor são mais altos que os nossos. Mas Ele nos convida a buscar entendimento — e promete iluminar quem o busca de coração.
A sabedoria de Deus
Os meus pensamentos não são os vossos pensamentos. A incompreensibilidade de Deus nos leva à humildade e adoração.
"பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே,
என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன.
என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.
"தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு!
அவன் அவருக்கு முன்பாகத் தரையில் கிடக்கும் மண்ணோடுகளில் ஒரு ஓடுதானே.
களிமண் குயவனைப் பார்த்து, ‘நீ என்னத்தை உருவாக்குகிறாய்?’
எனக் கேட்கலாமோ?
நீ செய்யும் பொருள் உன்னிடம்,
‘உனக்குக் கைத்திறன் இல்லை’
என்று சொல்லலாமோ?
நீங்கள் அறியவில்லையோ?
நீங்கள் கேள்விப்படவில்லையோ?
யெகோவாவே நித்திய இறைவன்,
பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே.
அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை.
அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.
யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்;
அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது.
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும்
உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும்,
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள்
கழிந்துபோன ஒரு நாளைப் போலவும்,
இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
இறைவனைப் புகழ்தல்
ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது!
அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை,
அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.
Buscar entendimento
Clama a mim e responder-te-ei. A sabedoria é a coisa principal — busque o entendimento com todo o coração.
நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன்.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்;
ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்;
ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது.
மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும்,
ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார்.
நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன்.
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள்.
அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
Iluminação divina
A entrada da tua Palavra dá luz e entendimento. Deus revela verdades ocultas e transforma nossa visão da realidade.
உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன;
அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன.
யெகோவா சொல்கிறதாவது: "நான் உனக்கு அறிவுறுத்தி,
நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்;
நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன்.
காற்றின் வழியையோ,
தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது.
அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும்
இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது.
இயேசு அதற்குப் பதிலாக, "ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, "மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்" என்றார்.
இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, "யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்" என்றார்.
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள்.
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகிறவர்கள் அல்ல.
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.
சோதிக்கப்படும்போது, "இறைவன் என்னைச் சோதிக்கிறார்" என்று ஒருவனும் சொல்லக்கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கிறவருமல்ல;