Confiabilidade
A confiabilidade de Deus é absoluta. Ele é fiel em todas as suas promessas, constante em seu amor e seguro em seu caráter. Podemos confiar nele completamente.
Deus é fiel
O Senhor é fiel em todas as suas palavras e bondoso em todos os seus atos. Grande é a sua fidelidade!
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.
ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;
உமது உண்மை பெரியது.
யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும்,
உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார்.
யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;
உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.
ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு
அவர்மேல் பயபக்தியாய் இருக்கிறவர்களோடும்,
அவருடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் என்றைக்கும் இருக்கிறது;
அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு,
அவருடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருப்பவர்கள் மேல்,
அவருடைய உடன்படிக்கையின் அன்பு நிலைத்திருக்கும்.
யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்
அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார்.
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்.
ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார்.
உங்களுக்கு நேரிட்ட சோதனைகள் பொதுவாக மனிதனுக்கு நேரிடுகிறவைகளே. இறைவன் உங்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்; ஆகவே உங்களால் தாங்கமுடியாத அளவுக்கு நீங்கள் சோதனைக்குள்ளாக அவர் இடங்கொடுக்கமாட்டார். ஆயினும் நீங்கள் சோதனைக்குட்படும்போது, நீங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு வழியையும் அவர் ஏற்படுத்தித் தருவார். அதனால், உங்களுக்கு அதைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கும்.
ஆகையால் உங்கள் இறைவனாகிய யெகோவா மட்டுமே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்; அவரே உண்மையுள்ள இறைவன். அவர் தன்னில் அன்புகூர்ந்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது அன்பின் உடன்படிக்கையை ஆயிரம் தலைமுறைக்கும் தொடர்ந்து காத்துக்கொள்கிறவர்.
யெகோவாவே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னுடனேயே இருப்பார். அவர் ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரியவுமாட்டார்; உன்னைக் கைவிடவுமாட்டார்; நீ பயப்படாமலும் மனந்தளராமலும் இரு" என்றான்.
Caráter de Deus
Toda boa dádiva vem do alto. O Senhor é bom e sua misericórdia dura para sempre. Nele podemos descansar.
நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்.
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்;
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்;
பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்;
அவர் உங்களைத் தாங்குவார்;
நீதிமான்களை அவர்
ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.
அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்;
உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
Integridade e confiança
Eu sou o Alfa e o Ômega — Deus é o mesmo ontem, hoje e sempre. Fiel em o que realizou e realizará por cada filho.
"நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்," என்று, "இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய" இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்;
உமது சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
யெகோவாவுக்குத் துதி
யெகோவாவே, நீரே என் இறைவன்;
நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.
அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;
நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,
பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.
எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்;
பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.
புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்;
ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்;
ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது.
"அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும்.