Consolo
O consolo de Deus é bálsamo para a alma ferida. Ele nos conforta em todas as tribulações para que possamos consolar outros com o mesmo consolo divino.
Deus consola
Ainda que eu ande pelo vale da sombra da morte, não temerei mal algum. O Senhor consola, guia e está sempre presente.
மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே
நான் நடந்தாலும்
நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,
ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும்,
எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்:
உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது.
நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.
யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும்,
அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
Confiança na aflição
Eu sei que o meu Redentor vive. Deus é força e escudo — mesmo na tribulação, Ele nos sustenta e consola.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
என் தோல் அழிந்துபோன பின்னும்,
நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.
நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்" என்று சொல்வாய்.
யெகோவாவே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னுடனேயே இருப்பார். அவர் ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரியவுமாட்டார்; உன்னைக் கைவிடவுமாட்டார்; நீ பயப்படாமலும் மனந்தளராமலும் இரு" என்றான்.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்."
எனவே நாமும் மனத்தைரியத்துடன்,
"கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன்.
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?"
என்று சொல்வோம்.
துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன்.
என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.
நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன்.