Deus é nosso refúgio
Deus é nosso refúgio e fortaleza, socorro bem presente nas angústias. Quando o mundo treme, o crente encontra paz sob as asas do Altíssimo.
Refúgio e fortaleza
Deus é nosso refúgio e fortaleza. Quem habita no abrigo do Altíssimo descansa à sombra do Todo-Poderoso.
இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார்,
ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
நான் யெகோவாவைக் குறித்து, "அவரே என் புகலிடம், என் கோட்டை,
நான் நம்பியிருக்கிற என் இறைவன்" என்று சொல்வேன்.
நிச்சயமாகவே அவர் உன்னை
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.
யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார்.
துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,
ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
தீய மனிதர் என்னை விழுங்கும்படி
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,
எனது பகைவரும் விரோதிகளுமான
அவர்களே தடுமாறி விழுவார்கள்.
ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
என் இருதயம் பயப்படாது;
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;
என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
உமது செவியை எனக்குச் சாய்த்து,
என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்;
என் புகலிடமான கன்மலையாகவும்,
என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.
நீரே என் புகலிடம்,
ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.
உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்;
யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க
என் புகலிடமான கன்மலையாய் இரும்;
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும்.
Proteção e segurança
O Senhor é a minha rocha e a minha fortaleza. Melhor é confiar no Senhor do que confiar no homem.
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்
என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.
என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;
இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.
மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;
இறைவனே நமது புகலிடம்.
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;
இறைவனே, நீரே என் கோட்டையும்,
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
யெகோவாவே, தலைமுறைதோறும்
நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும்
உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும்,
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்;
இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்;
ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது!
மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
Em todo tempo
O Senhor é bom e é fortaleza no dia da angústia. A torre forte do nome do Senhor protege os seus em toda circunstância.
யெகோவா நல்லவர்,
அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர்.
அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.
நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்;
வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர்.
புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும்,
வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர்.
முரடர்களின் மூச்சு,
ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு;
அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.
யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம்,
ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.