Ensinar
Ensinar é mandamento e dom. A Bíblia exorta pais, líderes e mestres a transmitir a verdade divina com fidelidade, paciência e sabedoria para as próximas gerações.
Ensinar a Palavra
Toda Escritura é útil para ensinar. Quem ouve as palavras de Jesus e as pratica é como o homem sábio que construiu sobre a rocha.
எல்லா வேதவசனமும் இறைவனின் உயிர்மூச்சினால் கொடுக்கப்பட்டன. இவை மனிதருக்கு போதிப்பதற்கும், அவர்களைக் கண்டிப்பதற்கும், அவர்களைத் திருத்துவதற்கும், நீதியாய் வாழ பயிற்றுவிப்பதற்கும், பயனுள்ளவையாய் இருக்கின்றன. இதனால், இறைவனுடைய ஊழியக்காரன் எல்லா நல்ல செயல்களையும் செய்ய, முழுமையாக தேறினவனாகிறான்.
இருவகை வீடுகள்
"எனவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும், கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான்.
கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி,
முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம்.
இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்:
இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்;
நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய,
அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது.
இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும்,
வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன.
ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்;
பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும்.
இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும்,
ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
Instruir as gerações
Ensina a criança nos caminhos de Deus. A geração que não conhece o Senhor perde a herança espiritual da fé.
உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து. இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும். அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள்.
பாவிகளின் அழைப்பிதலைக் குறித்த எச்சரிக்கை
என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்;
உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே.
அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும்,
உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை
என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள்,
உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.
அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.
நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்;
நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்;
நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.
ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு,
இந்த போதனை ஒரு வெளிச்சம்,
நற்கட்டுப்பாடும் கண்டித்தலும்
வாழ்வுக்கு வழி.
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்;
எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்;
அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே;
அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே;
தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று,
சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்;
உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்;
அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே;
உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.
ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று;
அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்,
பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல்.
என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்;
நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும்
எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்;
யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும்,
அவருடைய வல்லமையையும்,
அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது.
Fidelidade no ensino
Quem ensina com fidelidade merece dupla honra. Cuidado com doutrinas falsas — permaneçam na doutrina de Cristo.
திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும். ஏனெனில், "தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்" என்றும் "வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்" என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
பக்தியில்லாத பேச்சை விட்டுவிலகு. ஏனெனில் அதில் ஈடுபடுகிறவர்கள், இன்னும் அதிகதிகமாய் இறைவனை மறுதலிக்கிறவர்களாவார்கள். அவர்களுடைய போதனை புற்றுநோயைப்போல் பரவும். அவர்களுக்குள் இமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்.
கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான்.
இயேசு பண்டிகையில் போதித்தல்
பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார். யூதர்களோ வியப்படைந்து, "படிக்காமலே இந்த மனிதனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பின பிதாவிடமிருந்தே வருகிறது. இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனோ, அவன் எனது போதனை இறைவனிடமிருந்து வருகிறதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கிறேனா என்று அறிந்துகொள்வான். தனது சுய சிந்தனையில் பேசுகிறவன் தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாய் இருக்கிறான்; அவனில் அநீதி எதுவுமில்லை.