Esperança
A esperança cristã não é desejo vago — é certeza inabalável fundamentada nas promessas de Deus. Ela é âncora da alma, firme e segura, que penetra até o interior do véu.
Esperança viva
Bendito seja Deus que nos gerou de novo para uma esperança viva, mediante a ressurreição de Jesus Cristo.
உயிருள்ள நம்பிக்கைக்காக இறைவனுக்குத் துதி
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும்.

அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
Esperança que não decepciona
A esperança não decepciona, pois o amor de Deus é derramado em nossos corações pelo Espírito Santo.
இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது; ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவராலேயே தம்முடைய அன்பை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிறார்.
இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது; ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவராலேயே தம்முடைய அன்பை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிறார்.
சமாதானமும் நம்பிக்கையும்
ஆகவே, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், இறைவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்கிறோம். இயேசுவினாலேயே நாம் இப்பொழுது இந்தக் கிருபைக்குள் விசுவாசத்தினால் சென்றிருக்கிறோம், அந்தக் கிருபையிலேயே இப்பொழுதும் நிலைநிற்கிறோம்; இதனால் இறைவனுடைய மகிமையில் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறோம்.
அதுமாத்திரமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் பொறுமையையும், பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம்.
இந்த எதிர்பார்ப்பில்தான் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தை நாம் இப்போது காண்போமானால், அது எதிர்பார்ப்பு அல்ல. யார்தான் தம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றை எதிர்பார்த்திருப்பார்கள்? ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.
ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.
எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாக இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள்.
எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள்.

A fé é a certeza
A fé é a certeza do que se espera. Mantenhamos firme a confissão da esperança, pois fiel é o que prometeu.
விசுவாசம்
விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.
விசுவாசம்
விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.
நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும்,
உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள்.
இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம்.
ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும், நாங்கள் கேள்விப்பட்டோம். பரலோகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கிற நன்மைகளின் எதிர்பார்ப்பிலிருந்தே, இந்த விசுவாசமும் அன்பும் ஊற்றாகப் பொங்கி வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைக்குறித்து, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் மூலமாய் நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Esperança e confiança
Eu sei os planos que tenho para vocês — planos de paz e esperança. Deus é a fonte de toda esperança.
உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்." அவைகள், "உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.

யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,
நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.
யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,
நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.
நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்;
உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்;
உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது;
நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர்,
தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம்
நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்;
என்னை வெட்கப்பட விடாதேயும்;
என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும்.
உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும்,
ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்;
ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள்.
Esperança eterna
Somos salvos na esperança. Aquele que prometeu é fiel. A esperança está guardada nos céus para os que creem.
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம்.
எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கு இரட்சகரான ஜீவனுள்ள இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம். இதற்காகத்தான் நாம் கடுமையாக பாடுபட்டு முயற்சிக்கிறோம்.
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு.
நமது இறைவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு முன்பாக, உங்கள் விசுவாசத்தினால் வரும் செயலையும், அன்பினால் உண்டாகிய வேலையையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உங்களுக்குண்டான சகிப்புத்தன்மையையும் நாங்கள் நினைவுகூருகிறோம்.
கர்த்தரின் வருகை
பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை. இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம்.
ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம்.
ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது.
Expressões de esperança
Vinde a mim todos os que estais cansados. A esperança adia a dor e floresce na presença do Senhor.
"வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
யெகோவாவினுடைய தயவின் வருடம்
ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்;
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,
யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார்.
உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும்,
சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும்,
கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும்,
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், "யெகோவாவே என் உரிமைப் பங்கு;
ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்."
நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன்.
என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.
எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்;
ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும்.
எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்;
ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும்.
Firmeza na esperança
Esperai no Senhor! O cavalo é vaidade para a segurança, mas o Senhor guarda os que nele esperam.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,
உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,
உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;
அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்;
அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்
அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார்,
பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
எங்கள் இரட்சகராகிய இறைவனே,
உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால்
நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்;
பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும்
தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர்.
"ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?
என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.
உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும்.
நீரே என் இரட்சகராகிய இறைவன்,
நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன்.
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;
நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,
எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்;
துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை.
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்;
அவர் உன் வாழ்வைக் காப்பார்.
யெகோவா உன் போக்கையும் வரத்தையும்
இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.