Esperar em Deus
Esperar em Deus não é passividade — é confiança ativa no Senhor que age no tempo perfeito. Os que esperam nele não serão confundidos nem envergonhados.
Esperança em Deus
Descanse somente em Deus, ó minha alma, pois dele vem a minha esperança. Ele é rocha e salvação — não serei abalado.
ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து,
அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு;
மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும்
அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்;
ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள்
நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
யெகோவாவை எதிர்பார்த்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்.
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்;
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார்.
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும்,
ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்;
ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள்.
யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;
என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.
யெகோவாவுக்குக் காத்திரு;
பெலன்கொண்டு தைரியமாயிரு,
யெகோவாவுக்கே காத்திரு.
Confiança na espera
O Senhor é bom para os que esperam nele. O olho não viu o que Deus preparou para os que o amam e o aguardam.
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்;
நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம்.
காலைதோறும் எங்கள் பெலனாயும்,
துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.
உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற,
வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை,
எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை,
எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
"பழிக்குப்பழி வாங்குவேன்!" என்று நீ சொல்லாதே;
யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
துன்பத்தில் பொறுமை
ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான். நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள்.
ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.