Gratidão ao Senhor
A gratidão ao Senhor é resposta de amor diante da bondade divina. Louvar a Deus com cântico e magnificá-lo com ação de graças — isso é o que agrada ao Senhor.
Agradecer ao Senhor
Deus transformou nosso lamento em dança. Ele é digno de toda gratidão, em todo tempo e em toda circunstância.
என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.
நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,
நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.
அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;
உமது இரட்சிப்பை விரும்புவோர்,
"இறைவன் பெரியவர்!" என்று எப்போதும் சொல்வார்களாக.
Gratidão constante
Em tudo dai graças. Tudo o que Deus criou é bom, quando recebido com ação de graças e paz no coração.
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
ஏனெனில் இறைவன் படைத்ததெல்லாம் நல்லதே, அவற்றை நன்றி செலுத்துதலோடு நாம் ஏற்றுக்கொண்டால், ஒன்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல. ஏனெனில், இவை இறைவனுடைய வார்த்தையினாலும், நமது மன்றாட்டினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றன.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.
ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே
உமக்குப் பலியிடுவேன்.
நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன்.
‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ " என்றான்.