Homem de Deus
O homem de Deus é aquele que busca a justiça, a piedade, a fé e o amor. A Bíblia apresenta modelos de homens íntegros que andaram com Deus e marcaram a história.
Características do homem de Deus
O homem de Deus foge das paixões e segue a justiça, a piedade, a fé, o amor, a perseverança e a mansidão.
தீமோத்தேயுவிற்கு பவுலின் கட்டளைகள்
நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள். உங்களுடைய காரியங்களெல்லாம் அன்போடு செய்யப்படவேண்டும்.
மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.
Exemplos bíblicos
Noé era justo e íntegro entre seus contemporâneos. Jó era homem reto que temia a Deus e se desviava do mal.
நோவாவின் வம்சவரலாறு
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
முன்னுரை
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
Viver como filho de Deus
Quem faz a vontade de Deus é eleito. Medite na Palavra e ande nos caminhos do Senhor como verdadeiro discípulo.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்?
உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன்,
என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு,
உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்;
உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல,
நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்;
உமது வசனத்தை மறவேன்.
கிமெல்.
துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு, உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.