Homem de Deus
O homem de Deus é aquele que busca a justiça, a piedade, a fé e o amor. A Bíblia apresenta modelos de homens íntegros que andaram com Deus e marcaram a história.
Características do homem de Deus
O homem de Deus foge das paixões e segue a justiça, a piedade, a fé, o amor, a perseverança e a mansidão.
தீமோத்தேயுவுக்குப் பவுலின் கட்டளை
ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு.
நீ வாலிபனாய் இருப்பதால், உன்னை யாரும் தாழ்வாக எண்ண இடங்கொடாதே. அதனால் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள்.
மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
யெகோவா உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படி தானே கேட்கிறார்.
Exemplos bíblicos
Noé era justo e íntegro entre seus contemporâneos. Jó era homem reto que temia a Deus e se desviava do mal.
நோவாவும் பெருவெள்ளமும்
நோவாவின் வம்சவரலாறு இதுவே:
நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்.
அறிமுகம்
ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்றொரு மனிதன் வாழ்ந்தான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்தான்.
இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான். தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்;
ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது.
Viver como filho de Deus
Quem faz a vontade de Deus é eleito. Medite na Palavra e ande nos caminhos do Senhor como verdadeiro discípulo.
ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார்.
வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.
ג கிமெல்
தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல்,
பாவிகளின் வழியில் நில்லாமல்,
பரிகாசக்காரருடன் உட்காராமல்,
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.
அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு,
பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து,
இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார்.
அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.
தீயவர்களோ அப்படியல்ல,
அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும்
பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை,
பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்;
தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.
உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள்.