Intimidade com Deus
A intimidade com Deus é o maior privilégio do cristão. Ele nos convida a nos aproximar, a conhecê-lo profundamente e a desfrutar de comunhão diária com o Criador do universo.
Aproximar-se de Deus
Chegai-vos a Deus e Ele se chegará a vós. Deus deseja intimidade, não religiosidade. Ele busca os que o buscam de todo coração.
இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.
தாகமுள்ளோருக்கு அழைப்பு
"ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும்
நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்,
வாங்கி உட்கொள்ளுங்கள்.
வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி
திராட்சரசமும் பாலும் வாங்குங்கள்.
உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?
திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்?
கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள்.
அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும்.
காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்;
உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்;
நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன்.
இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும்,
மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன்.
ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய்,
உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும்
இறைவனுமான உங்கள் யெகோவா
உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்."
அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்;
அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.
அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்;
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன்.
உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்." அவைகள், "உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.
Sede de Deus
Como a corça deseja as correntes de água, assim a minha alma suspira por ti, ó Deus. A intimidade nasce do desejo profundo.
மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல்,
இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது.
என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது;
நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்?
இறைவனே, நீரே என் இறைவன்,
நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்;
தண்ணீரில்லாமல் வறண்டதும்,
காய்ந்ததுமான நிலத்திலே
என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்;
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.
உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;
ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.
நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;
ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.
அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்;
என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்;
இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.
நீரே என் உதவியாயிருப்பதால்,
உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.
நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்
பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.
அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்;
இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.
Unidade com o Pai
Jesus orou pela unidade dos seus com o Pai. A intimidade com Deus inclui confissão, perdão e alegria na comunhão.
நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார்.
அவர் உன்னை இரட்சிக்க வல்லவர்.
உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார்.
அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்.
அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்."
நம்முடைய பாவங்களை நாம் இறைவனுக்கு அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பார். ஏனெனில் அவர் வாக்குமாறாதவரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார்.