Meditação
A meditação na Palavra de Deus é prática espiritual essencial. Diferente da meditação oriental, a meditação bíblica é reflexão profunda sobre as Escrituras — ruminar a Palavra dia e noite.
Meditar na Palavra dia e noite
Bem-aventurado o homem que medita na lei do Senhor de dia e de noite. Ele é como árvore plantada junto a ribeiros de águas.
தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல்,
பாவிகளின் வழியில் நில்லாமல்,
பரிகாசக்காரருடன் உட்காராமல்,
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.
இந்த சட்டத்தின் புத்தகத்தை உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய்.
ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்!
நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.
உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால்,
அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது.
நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால்,
எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால்,
முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.
ג கிமெல்
ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்,
அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்;
உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன்.
ז சயின்
விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்;
உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி,
இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.
Frutos da meditação
A meditação produz entendimento, alegria e adoração. Quem medita na Palavra encontra direção, paz e renovação espiritual.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,
என் வாயின் வார்த்தைகளும்
என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.
என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்;
என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;
ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.
உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;
உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்" என்றேன்.
நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;
உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து,
உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,
என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.