Namoro e sexo
Namoro e sexo são temas que a Bíblia trata com clareza e sem tabus. Deus criou o sexo como bênção dentro do casamento e nos chama à pureza fora dele.
Pureza sexual
A vontade de Deus é a santificação. Cada um saiba controlar seu próprio corpo em santidade e honra, não na paixão do desejo.
நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும். இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்;
"வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்" என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர்.
அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
Arrependimento e restauração
Bem-aventurado aquele cujo pecado é perdoado. Deus restaura os que se arrependem e cria neles um coração limpo e renovado.
யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ,
யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ,
அவர்கள் பாக்கியவான்கள்.
யாருடைய பாவத்தைக்குறித்து,
அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ,
யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது,
தினமும் என் அழுகையினால்,
என் எலும்புகள் பலவீனமாயிற்று.
இரவும் பகலும்
உமது கரம் பாரமாயிருந்தது;
ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல,
என் பெலன் வறண்டுபோயிற்று.
அதின்பின் நான் என் பாவத்தை
உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்;
என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை.
நான், "யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்"
என்று சொன்னேன்;
நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.
ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில்
உம்மை நோக்கி மன்றாடட்டும்;
பெருவெள்ளம் எழும்பும்போது
நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.
என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி,
என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும்.
என் மீறுதல்களை நான் அறிவேன்;
என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்;
உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்;
ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர்,
உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர்.
ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;
என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன்.
நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்;
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும்.
என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து,
என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும்.
இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து,
நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும்.
உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம்,
உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்;
விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும்.