Negação de Cristo
Negar a Cristo é o ato mais grave que um ser humano pode cometer. Jesus advertiu: quem me negar diante dos homens, eu o negarei diante do meu Pai que está nos céus.
A advertência de Jesus
Jesus alertou sobre as consequências eternas de negá-lo. Quem se envergonha dele, dele o Filho do Homem se envergonhará quando vier em glória.
மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
விபசாரமும் பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில், யாராவது என்னைக்குறித்தும், என் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் பரிசுத்த தூதர்களுடன் என் பிதாவின் மகிமையில் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்" என்றார்.
நாம் பாடுகளைத் தாங்கினால்,
நாமும் அவருடன் ஆளுகை செய்வோம்.
நாம் கிறிஸ்துவை மறுதலித்தால்,
அவரும் நம்மை மறுதலிப்பார்;
Exemplos e alertas
Pedro negou Jesus três vezes, mas foi restaurado. A Bíblia alerta contra falsos mestres que negam o Senhor que os resgatou.
இயேசு அதற்கு அவனிடம், "நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று பதிலளித்தார்.
அதற்கு அவன், "நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது" என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான்.
கள்ளப் போதகர்களும் அவர்களின் அழிவும்
முற்காலத்தில் பொய்த் தீர்க்கதரிசிகள் மக்கள் மத்தியிலே இருந்தார்கள். அதுபோலவே, பொய் வேத ஆசிரியர்கள் உங்கள் மத்தியிலே இருப்பார்கள். அவர்கள் அழிவை ஏற்படுத்தும் பொய்யான போதனைகளை இரகசியமாய் புகுத்துவார்கள். தங்களை விலைகொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரையும் அவர்கள் மறுதலிப்பார்கள். இவ்விதமாக அழிவைத் தங்கள்மேல் விரைவாய் வருவித்துக்கொள்வார்கள்.
யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான்.
பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்.