Palavras de consolo
A Bíblia é repleta de palavras de consolo para os aflitos. Deus está perto dos que sofrem e promete enxugar toda lágrima, renovar a esperança e restaurar o coração partido.
Deus está conosco
O Senhor é refúgio e fortaleza. Mesmo no vale da sombra da morte, não precisamos temer — Ele está ao nosso lado para nos consolar.
மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே
நான் நடந்தாலும்
நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,
ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும்,
எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்;
இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,
அதையே நான் தேடுகிறேன்:
நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,
அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்
நான் என் வாழ்நாள் முழுவதும்
யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
ஏனெனில் துன்ப நாளில்,
அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;
அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,
கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.
ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு;
என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
Consolação e esperança
Deus consola os humildes e exalta os abatidos. Ele nunca nos desamparará.
யெகோவாவே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னுடனேயே இருப்பார். அவர் ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரியவுமாட்டார்; உன்னைக் கைவிடவுமாட்டார்; நீ பயப்படாமலும் மனந்தளராமலும் இரு" என்றான்.
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன் இறைவனாகிய யெகோவா உனக்காக யுத்தம் செய்வார்" என்றேன்.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்."
அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி,
துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார்.
Descanso e renovação
Bem-aventurados os que choram, pois serão consolados. A Bíblia nos convida a descansar nos braços do Pai e encontrar paz para a alma.
துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
ஆகவே, இறைவனுடைய வல்லமையான கரத்தின்கீழே உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது ஏற்றவேளையில், அவர் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.
என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக,
உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்;
ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.
நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.
நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்;
நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு,
வானத்தின் கீழே ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய காலமுண்டு.
பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, இறப்பதற்கு ஒரு காலமுண்டு;
நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு;
கொல்வதற்கு ஒரு காலமுண்டு, சுகப்படுத்துவதற்கு ஒரு காலமுண்டு;
இடித்து வீழ்த்த ஒரு காலமுண்டு, கட்டி எழுப்ப ஒரு காலமுண்டு;
அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு;
துக்கங்கொண்டாட ஒரு காலமுண்டு, நடனம் ஆட ஒரு காலமுண்டு;
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு;
அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு.
தேடிச் சேர்க்க ஒரு காலமுண்டு, விட்டுவிட ஒரு காலமுண்டு;
வைத்திருக்க ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;
கிழித்துப் பிரிக்க ஒரு காலமுண்டு, தைத்து ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு;
பேசாமல் இருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
அன்பாயிருக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு;
யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.