Protecção e segurança
Deus é nosso protetor e refúgio seguro. Em todas as circunstâncias, a Bíblia nos assegura que o Senhor guarda, sustenta e protege aqueles que nele confiam.
Deus, a nossa fortaleza
O Senhor é refúgio e fortaleza, socorro bem presente na angústia. Quem habita no esconderijo do Altíssimo descansa à sombra do Todo-Poderoso.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்
சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
நான் யெகோவாவை நோக்கி:
நீர் என்னுடைய அடைக்கலம்,
என்னுடைய கோட்டை, என் தேவன்,
நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;
அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;
அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,
உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது உன்னை அணுகாது.
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை
உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர்,
யாருக்கு பயப்படுவேன்?
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;
நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.
சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்;
நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
O escudo do Senhor
Deus nos rodeia com sua proteção como um escudo. Ele é rocha, baluarte e libertador. Sua fidelidade nos cobre e nos guarda.
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;
யெகோவா என்னைத் தாங்குகிறார்.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்
நான் பயப்படமாட்டேன்.
தேவனுடைய வழி உத்தமமானது;
யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது;
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது;
உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
என்னுடைய கைகளைப் போருக்கும்
என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.
அவர் என்னுடைய தயாபரரும்,
என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும்,
என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும்,
நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து,
ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.
உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.
யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,
கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்,
ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து,
என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து
உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே!
உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.
கண்மணியைப்போல் என்னைக் காத்து.
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும்,
என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக,
உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
உமது கோபத்தின் காலத்திலே
அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;
யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை அழிக்கும்.
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;
என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து,
இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
Segurança e provisão
O Senhor supre todas as necessidades dos seus filhos. Quem busca o Reino primeiro não precisa temer — nada faltará aos que temem ao Senhor.
யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;
நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;
யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
யெகோவாவை நம்பி நன்மைசெய்;
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
நான் இளைஞனாயிருந்தேன்,
முதிர்வயதுள்ளவனுமானேன்;
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
Guarda e livramento
O anjo do Senhor acampa ao redor dos que o temem e os livra. Deus promete guardar todas as nossas saídas e entradas para sempre.
யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி
முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;
அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக
என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;
உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
யெகோவா உன்னைக் காக்கிறவர்;
யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ
உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;
யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,
சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;
அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,
யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Confiança inabalável
Melhor é confiar no Senhor do que confiar no homem. Quem anda em integridade anda seguro, e a torre forte do nome do Senhor protege o justo.
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
மனிதனை நம்புவதைவிட,
யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;
அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;
துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;
துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
யெகோவா ஞானத்தைத் தருகிறார்;
அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து,
தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்;
பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்;
வெற்றியோ யெகோவாவால் வரும்.
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
A presença protetora
O Senhor prometeu estar conosco e nunca nos desampara. Ele é como sombra à nossa direita e fortaleza em todo o tempo.
நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா தாமே உன்னுடன்கூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை" என்று சொன்னான்.
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;
அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;
அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி,
அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
பென்யமீனைக்குறித்து:
"யெகோவாவுக்குப் பிரியமானவன்,
அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்;
அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி,
அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்" என்றான்.
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என்றான்.
யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
Promessas de cuidado
Deus garante que nem um fio de cabelo cairá sem sua permissão. Ele deseja que vivamos em paz, confiança e segurança total nele.
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது. உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
Fidelidade e aliança
Deus é fiel à sua aliança. Ele protege cada promessa que faz e guarda os seus como a menina dos seus olhos.
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை. நாம் எதைக்கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவனை தேவன் தீமையிலிருந்து காக்கிறார், சாத்தான் அவனைத் தொடமாட்டான்.
நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யெகோவாவைத் தவிர தேவன் யார்?
நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
இப்போதும் உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; யெகோவாவான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
தமஸ்குவிற்கு அடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
நீ போன இடமெல்லாம் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
"என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள்.
இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்" என்றார்.
யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்.
Provisão diária
Deus satisfaz os desejos do coração dos seus filhos. Ele abençoa, renova as forças e sustenta dia após dia quem nele confia.
யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்;
அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன்,
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.
எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;
நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)
உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;
உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்;
நான் மெலிந்துபோனேன்,
அவர் என்னைப் பாதுகாத்தார்.
என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால்,
நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும்,
என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.
என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே;
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்;
நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்;
அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.
நீர் உமது கையைத் திறந்து,
எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;
யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
தேவனை ஏமாற்றாதே
மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
நான் அவர்களையும் என்னுடைய மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யச்செய்வேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்;
ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்;
இதுவே அறிவின் மேன்மை.
அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் களைப்புற்ற ஆத்துமாவைச் சம்பூரணமடையச்செய்து, சோர்ந்துபோன எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.