Temor dos homens
O temor dos homens é uma armadilha que paralisa a fé. A Bíblia nos convida a trocar o medo humano pela confiança em Deus, que é nosso refúgio e escudo.
Não temas os homens
Deus é a nossa luz e salvação — de quem teremos medo? A Escritura nos encoraja a não temer aqueles que podem destruir o corpo, mas não a alma.
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
தீய மனிதர் என்னை விழுங்கும்படி
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,
எனது பகைவரும் விரோதிகளுமான
அவர்களே தடுமாறி விழுவார்கள்.
ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
என் இருதயம் பயப்படாது;
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள்.
"என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள்.
Confiança em Deus acima do medo
Quando tememos a Deus, o medo dos homens perde o poder. O Senhor está conosco, e se Ele é por nós, quem será contra nós?
நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன்.
நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்;
அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்.
அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
எனவே நாமும் மனத்தைரியத்துடன்,
"கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன்.
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?"
என்று சொல்வோம்.
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன் இறைவனாகிய யெகோவா உனக்காக யுத்தம் செய்வார்" என்றேன்.
மனுபுத்திரனே, நீ அவர்களுக்கோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கோ பயப்படாதே. உன்னைச் சுற்றி நெருஞ்சில்களும் முட்களும் இருந்தாலும், தேள்கள் மத்தியில் நீ குடியிருந்தாலும் அஞ்சவேண்டாம். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தினர்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் சொல்வது எதுவாயினும் நீ பயப்படாதே. திகிலடையாதே.