Todo poderoso
Deus é Todo-Poderoso — onipotente, onisciente e onipresente. Nada está além do seu alcance, nada escapa ao seu conhecimento e nada foge ao seu controle soberano.
O poder soberano de Deus
O Senhor reina sobre todas as coisas. Desde a criação do universo até os detalhes da nossa vida, seu poder se manifesta de forma absoluta e inesgotável.
"ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது மகா வல்லமையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் வானங்களையும், பூமியையும் உருவாக்கினீர். உம்மால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமேயில்லை.
"மாம்சமான யாவருக்கும் இறைவனாகிய யெகோவா நானே. என்னால் இயலாதது ஒன்றுண்டோ?
யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்;
அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது.
யெகோவாவே, மேன்மையும், வல்லமையும்,
மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே.
வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே.
யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே.
நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன;
எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே.
எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும்
பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது.
Nada é impossível para Deus
Para Deus não há impossíveis. O que parece inalcançável aos nossos olhos é plenamente realizável nas mãos do Todo-Poderoso.
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை" என்றான்.
அவர் தொடர்ந்து, "அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துவிடும். ஆனால், என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும்" என்றார்.
வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே;
தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
ஆழமானதும் மறைவானதுமானவற்றை வெளிப்படுத்துகிறவர் அவரே;
இருளில் உள்ளதை அவர் அறிகிறார்,
ஒளியும் அவருடன் தங்கியிருக்கிறது.
O Rei eterno
Deus é o Rei eterno, imortal, invisível, único Deus sábio. Seu trono é desde a eternidade e seu reino não terá fim.
"நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்," என்று, "இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய" இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென்.
பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,
உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,
எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;
நாங்கள் இரட்சிக்கப்படும்படி
உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
Refúgio no Todo-Poderoso
O poder de Deus é nosso abrigo. Em tempos de tempestade, podemos descansar na certeza de que Ele sustenta e protege os seus.
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
நான் யெகோவாவைக் குறித்து, "அவரே என் புகலிடம், என் கோட்டை,
நான் நம்பியிருக்கிற என் இறைவன்" என்று சொல்வேன்.
என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,
யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.
இறைவனின் போர்க்கவசம்
இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள்.
ஏனெனில், சாவோ வாழ்வோ, இறைத்தூதர்களோ பிசாசுகளோ, நிகழ்காலமோ எதிர்காலமோ, எத்தகைய வல்லமைகளோ எவையும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பதில் நான் மனவுறுதி உடையவனாய் இருக்கிறேன். மேலே வானத்திலுள்ளவைகளோ, கீழே ஆழத்திலுள்ளவைகளோ, அல்லது படைக்கப்பட்டவைகளிலுள்ள வேறு எதுவும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார்.
அவர்களையும், என் மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள இடங்களையும் நான் ஆசீர்வதிப்பேன். நான் பருவகாலத்தில் மழையைப் பொழியச்செய்வேன். அது செழிக்கப்பண்ணும் ஆசீர்வாதமான மழையாக இருக்கும்.