22 அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன்1:22 அவன் வாழ்நாளெல்லாம் நசரேயனாக இருக்கும்படி அவனை ஆலயத்தில் விட்டுவிடுவேன்; என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.
யெகோவாவுடைய ஆலயத்தில் சாமுவேல்
23 அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள். 24 அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும்1:24 3 வயது காளைகளையும், ஒரு மரக்கால்1:24 ஏறக்குறைய 10. கிலோ மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.