Pular para o conteúdo
Publicidade

2 கொரிந்தியர் 6:14-17

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

அவிசுவாசிகளுடன் இணைந்திருத்தல்

14 அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? 15 கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? 16 தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே. 17 எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    14 அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன? 15 கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும்6:15 சாத்தானுக்கும் என்பது மூல மொழியில் பெலியேல் என்றுள்ளது இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது? 16 இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்:

    "நான் அவர்களுடன் வாழுவேன்.

    அவர்களிடையே உலாவுவேன்.

    நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.

    அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்."6:16 லேவி. 26:12; எரே. 32:38; எசே. 37:27

    17 ஆகவே,

    "அவர்களைவிட்டு வெளியே வந்து,

    பிரிந்திருங்கள்.

    அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்.

    அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்,

    என்று கர்த்தர் சொல்கிறார்."6:17 ஏசா. 52:11; எசே. 20:34,41

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.