யூத ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக பேதுருவும், யோவானும்
1 பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து, 3 அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.