Pular para o conteúdo
Publicidade

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29-31

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

29 இப்பொழுதும், கர்த்தாவே,

அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து,

நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி,

உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை

முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்" என்றார்கள்.

31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    29 இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும். 30 உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்" என்று மன்றாடினார்கள்.

    31 அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.