பரிசுத்த ஜீவியத்திற்கான விதிமுறைகள்
1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 2 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள். 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.