2 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். 3 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.