14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது:
காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்;
கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15 இந்த மக்கள் கண்களினால் காணாமலும்,
காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்,
நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக,
அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;
காதால் மந்தமாகக் கேட்டு,
தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.