Pular para o conteúdo
Publicidade

ரோமர் 14:13,15,17

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். 15 ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 17 தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    13 ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக்கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ போடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 15 நீ சாப்பிடுகிற உணவின் காரணமாக உன் சகோதரன் மனத்தாங்கல் அடைந்தால், நீ அவனில் அன்பு காட்டுகிறவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ சாப்பிடும் உணவினால் எந்த சகோதரனுக்காக கிறிஸ்து மரித்தாரோ அந்த சகோதரனை நீ அழித்துப்போட வேண்டாம். 17 ஏனெனில் இறைவனுடைய அரசு சாப்பிடுவதையும் குடிப்பதையும் பற்றியதுமான விஷயமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான சந்தோஷம் என்பவைகளைப் பற்றியதே.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.