பவுலின் இறுதி அறிவுரை.
1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, 2 எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள்.