20 ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள்.
27 உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.