21 உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்;
உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.
22 தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும்
நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும்,
அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும்,
அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.