Pular para o conteúdo
Publicidade

ஆமோஸ் 5:21-24

OTCVTAM Indian Tamil Contemporary Version

21 உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்;

உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.

22 தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும்

நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும்,

அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும்,

அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.

23 உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள்.

உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன்.

24 அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும்.

நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    21 உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. 22 உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன். 23 உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். 24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.