2 அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக;
ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது.
3 உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது;
உமது பெயர் ஊற்றுண்ட வாசனைத் தைலம்போல் இருக்கிறது.
கன்னியர் உம்மைக் காதலிப்பதில் ஆச்சரியம் இல்லையே!