9 இருந்ததே இனிமேலும் இருக்கும்,
செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்;
சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை.
10 "பாருங்கள், இது புதிதானது!"
என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ?
அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது;
நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது.