9 யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி;
என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய்.
அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்;
அவனை எழுப்பத் துணிபவன் யார்?
10 செங்கோலுக்குரியவர் வரும்வரை
செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது,
ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது;
நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது.