அவிசுவாசத்துக்கு எதிரான எச்சரிக்கை
7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி:
"இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
8 நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில்
கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.
12 ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 13 "இன்று" என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள்.
15 "இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல்
உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்"3:15 சங். 95:7,8
என்று சொல்லப்பட்டிருக்கிறது.