ஆபகூக்கின் முறைப்பாடு
2 யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்?
நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே.
எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், "வன்முறை" எனக் கதறவேண்டும்?
இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே.
3 நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்?
ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்?
அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே;
போராட்டமும், வாதையும் பெருகுகின்றன.