மனமாறுங்கள்
12 ஆகையால், "இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி,
உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்"
என்று யெகோவா அறிவிக்கிறார்.
13 உங்கள் உடைகளையல்ல,
உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்;
ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர்,
கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்;
பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர்.