40 யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், "நாங்கள் மேசியாவைக் கண்டோம்" என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.