இயேசுவின் ஊர்வலம்
12 மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். 13 அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள்,
"ஓசன்னா!12:13 சங். 118:25,26"
"கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!"
"இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!"
என்று ஆர்ப்பரித்தார்கள்.