Pular para o conteúdo
Publicidade

யோவான் 13:6-8

OTCVTAM Indian Tamil Contemporary Version

6 இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், "ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?" என்றான்.

7 இயேசு அதற்குப் பதிலாக, "நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்" என்றார்.

8 அப்பொழுது பேதுரு அவரிடம், "இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது" என்றான்.

அதற்கு இயேசு, "நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை" என்றார்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். 7 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். 8 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.