இயேசு பேதுருவை நிலைநிறுத்துவது
15 அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயா?" என்று கேட்டார்.
அதற்கு அவன், "ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்றான்.
அப்பொழுது இயேசு, "என் ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பாயாக" என்றார்.
19 பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் காட்டும்படியாகவே இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், "என்னைப் பின்பற்று" என்றார்.