Pular para o conteúdo
Publicidade

புலம்பல் 3:21-26

OTCVTAM Indian Tamil Contemporary Version

21 ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன்.

அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:

22 அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.

ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.

23 உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;

உமது உண்மை பெரியது.

24 நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், "யெகோவாவே என் உரிமைப் பங்கு;

ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்."

25 யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும்,

அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.

26 எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக

அமைதியாய் காத்திருப்பது நல்லது.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    21 இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.

    22 நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

    23 அவைகள் காலைதோறும் புதியவைகள்;

    உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

    24 யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்;

    ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

    25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.

    26 யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.

Lamentações
Ver todos os capítulos de Lamentações